ஈரோடு மாவட்டத்தில் தீ விபத்தில் சிக்கிய குடும்பம்! போலீசார் விசாரணை!

ஈரோடு மாவட்டத்தில் தீ விபத்தில் சிக்கிய குடும்பம்! போலீசார் விசாரணை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை எடுத்துள்ள சீனாபுரம் அருகே உள்ள மரநாயக்கனூரை சேர்ந்தவர் துரைசாமி (60). இவரது மனைவி விஜயலட்சுமி (55). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களின் குடிசை வீடு திடீரென தீ பிடித்தது. அதனைக் கண்ட துரைசாமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றனர்.

அவர்கள் தீயில் சிக்கிக் கொள்ளாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அதனை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு  வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

இந்நிலையில் அருகில் இருந்த சிமெண்ட் மேற்குரையால் மற்றொரு வீட்டுக்கும் தீபரவி எறிய தொடங்கியது. மேலும் கோபியில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. இந் நிலையில் தீயணைப்பு  வீரர்கள் இரண்டு வீடுகளில் இருந்து தீயை முழுமையாக அனைத்தனர்.

  இந்த தீ விபத்தில் ஓலை குடிசை முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டதுடன் மற்றொரு சேதத்துடன் தப்பியது . மேலும் இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து தீ விபத்துக்கான காரணம் என்ன என்பதை விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment