குடியுரிமை திருத்த சட்டம்… உச்ச நீதி மன்றம் தீர்ப்பு?

0
87

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பாக இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு போடப்பட்டது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த மனு தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்திற்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதி ஒத்திவைத்துள்ளது.