மும்பையில் இருந்து விலகி கோவாவுக்கு விளையாடப் போகும் அர்ஜுன் டெண்டுல்கர்… திடீர் முடிவு!
இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வளரும் கிரிக்கெட் நட்சத்திரமாக உருவாகி வருகிறார்.
ஆல்ரவுண்டரான அவரை கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட அனுமதிக்கவில்லை. அதுபோல ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்காக போட்டிகளில் விளையாடி வருகிறார். அங்கும் அவருக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை.
இதையடுத்து வரும் உள்நாட்டு சீசனில் கோவா அணிக்காக விளையாடும் முடிவை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய அர்ஜுன், 2022-23 சீசனில் கோவாவில் விளையாடுவார்.
முன்னதாக அர்ஜுன், மும்பைக்காக இரண்டு ஆட்டங்களில் விளையாடினார், ஆனால் அவரால் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தை ஏற்படுத்த முடியவில்லை.., அர்ஜுன் கடந்த சீசனில் லீக் நிலைகளில் மும்பை ரஞ்சி டிராபி அணியில் ஒரு அங்கம் வகித்தார். மும்பையில் இருக்கும் திறமையின் தரத்தைக் கருத்தில் கொண்டு, இளம் வீரரால் எந்த நிலையிலும் லெவன் அணியில் இடம் பெற முடியவில்லை.
இதையடுத்து கோவா அணிக்கு சென்றால் அதிக போட்டிகளில் விளையாடி ஆட்டத்திறனை மேம்படுத்த முடியும் என்பதால் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தடையில்லா சான்றிதழைப் பெற்று இந்த முடிவை எடுத்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் அவர் கோவா அணிக்காக விளையாடுவார் என சொல்லப்படுகிறது.