சேலம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது! பீதியில் அப்பகுதி மக்கள்!
சேலம் என் ஐ ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் என் ஐ ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிக் (22). இவர் சேலம் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் தங்கி தனியாக வெள்ளித்தொழில் செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.
மேலும் அவரை விசாரணை இவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரியவந்தது. மேலும் அதனையடுத்து ஆசிக் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதனை அடுத்து ஆசிக் தங்கி இருக்கும் வீட்டை சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது அங்கு விலை உயர்ந்த செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்கள் இருப்பது தெரிய வந்தது. மேலும் அவற்றை பறிமுதல் செய்த என்னை அதிகாரிகள் அதனை ஆய்வுக்கு சென்னை அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அவரை என் ஐ ஏ அதிகாரிகள் சேலம் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சேலம் சிறையில் உள்ள ஆசிக்யை போலீசார்காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக சேலம் டிசிஎல் மாஜிஸ்திரேட்டு கோர்ட் எண் 1 ல் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மேலும் அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் சேலம் டவுன் போலீசார் ஆசிக்யை காலையில் எடுத்து தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரையும் விசாரணை நடத்தினார்கள். அதன் பின்னர் இன்று ஆசிக்கை இன்று சேலம் மத்திய சிறையில் அடைக்வுள்ளனர்.