ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஆறு உணவுகள் என்னென்ன தெரியுமா?
மனிதனின் உடல் ஒருவருக்கொருவர் வேறுபடும். ஒருவர் உண்ணும் உணவு மற்றொருவருக்கு சேராமல் கூட போக நேரிடும். அந்த வகையில் ஆண்கள் கட்டாயம் எந்த ஆறு உணவுகளை தவிர்ப்பதால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும் . முதலில் சோயா சார்ந்த உணவுகள். ஆண்கள் சோயா உணவுகளை அதிகமாக உட்கொண்டால் அவர்கள் அந்த ஹார்மோன்களில் இம்பேலன்ஸ் நிலமை உண்டாகும். அதனால் இதை தவிர்ப்பது நல்லது. அதற்கடுத்தப்படியாக அனைவருக்கும் பிடித்த பாப்கான்.
இதனை அனைவரும் விரும்பி உண்பர்.இதில் அதிக அளவு கொழுப்பு உள்ளது அதுமட்டுமின்றி சோடியம் மற்றும் கார்சிநோஜென்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.இது உடலுக்கு மிகவும் ஆபத்தானது.பெண்களும் இதை தவிர்ப்பது நல்லது.அடுத்தபடியாக பதப்படுத்தப்பட்ட இறைச்சி.இதை உண்பதால் ஆண்களின் விந்து அணுக்கள் குறையும்.அதனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
பிரெஞ்சு பிரைஸ் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
இதை சாப்பிடுவதாலும் விந்தணு பிரச்சனை சுலபமாக ஏற்படும். போல பால் சார்ந்த பொருட்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்வதாலும் கொழுப்பு அதிகரிக்கக்கூடும். அளவான முறையில் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.கடைசியாக மது பானம்.மது அருந்துவதால் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகும்.நுரையீரல் போன்றவை பாதிக்கும்.குறிப்பாக குழந்தைக்கு முயற்சி செய்பவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.