கேப்டனாகும் முழு தகுதியும் அவருக்கு இருக்கு… பந்துவீச்சாளர் குறித்து முன்னாள் வீரரின் கருத்து

0
195

கேப்டனாகும் முழு தகுதியும் அவருக்கு இருக்கு… பந்துவீச்சாளர் குறித்து முன்னாள் வீரரின் கருத்து

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்த போட்டி கடந்த மாதம் நடந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக துணைக் கேப்டன் ஜஸ்ப்ரீத் பூம்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். கபில்தேவுக்கு பிறகு இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணியை வழிநடத்துகிறார்.

அதுபோலவே தோனி போல எந்த விதமான உள்ளூர் போட்டிகளிலும் தலைமை தாங்காமல் நேரடியாக இந்திய அணிக்கு தலைமை தாங்கினார் பூம்ரா. ஆனால் அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்நிலையில் டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு கேப்டனாக செயல்படக் கூடிய தகுதி பூம்ராவுக்கு உள்ளது என பர்த்தீவ் படேல் கூறியுள்ளார். அதில் “குஜராத் அணியில் என் தலைமையின் கீழ் அவர் கிரிக்கெட் விளையாடும் போது அவரிடம் நுணுக்கமான பந்துவீச்சு மற்றும் பேட்ஸ்மேன்களை வீழ்த்தும் திறன் இருப்பதைப் பார்த்தேன். இவருக்கு இந்திய டெஸ்ட்  அணியின் எதிர்கால கேப்டன் ஆகும் தகுதி இருக்கிறது” என ஆதரவாக பேசியுள்ளார்.

Previous articleசினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை… நடிகை தமன்னாவின் திடீர் குற்றச்சாட்டு!
Next articleவிருமன் ரிலீஸ்… நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயைக் கொடுத்த சூர்யா & கார்த்தி