பார்த்தாவே நாக்கில் எச்சி ஊரும்!.. மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க…

0
161

பார்த்தாவே நாக்கில் எச்சி ஊரும்!.. மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க…

 

மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி இதை தயாரிக்க தேவைப்படும் பொருள்கள் சிக்கன் லெக் பீஸ் 6, வெங்காயம் 20 பொடிப்பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் 2 நீளமாக அறுத்துக் கொள்ள வேண்டும், இஞ்சி 1 துண்டு நீளமாக நறுக்கியது, தேங்காய் எண்ணெய் 11/2 டீஸ்பூன், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, சமையல் எண்ணெய் தேவையான அளவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் 2, மஞ்சத்தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு ,சோள மாவு 2 டீஸ்பூன், அரிசி மாவு 2 டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், மற்றும் எலுமிச்சை 1 ஆகியவற்றை தயாராக அடுப்பு பக்கத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போ எப்படி செய்வதென்று பார்க்கலாம், முதலில் சிக்கன் லெக் பீஸை சுத்தமாக கழுவி எடுக்க வேண்டும். அதில் ஆங்கே அங்கே கத்தியால் கீறி விட வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் பீஸை வைத்து அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதிலேயே பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கி விட வேண்டும். அதில் வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து சிக்கன் துண்டுகளை சேர்த்து அதோடு மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி விட வேண்டும். சிறிது நேரம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கினால் மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி தயார். பிறகு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து சாப்பிடலாம்.

 

Previous articleபலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா?
Next articleஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் நாள்!