கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி அமைப்பை மீண்டும் ஒருங்கிணைக்க பலர் முயற்சி செய்வதாக தகவல்!…
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை வரவுள்ள நிலையில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் இருவர் சமீபத்தில் சேலத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கவுள்ளார்கள்.
இந்நிலையில் நம் அண்டை நாடான இலங்கையில் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர்.இதனால் விடுதலைப் புலிகள் அமைப்பு 2009இல் இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பு நீர்த்துப்போனது.
இருந்தாலும் அந்த அமைப்பை மீண்டும் ஒருங்கிணைத்து உயிர் கொடுக்க சிலர் முயற்சித்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூரில் நவீன் வயது 25 என்பவரையும் சஞ்சய் பிரகாஷ் வயது 24 என்ற இளைஞர்களை தமிழக போலீசார் கடந்த மாதம் கைது செய்தார்கள்.
மேலும் இவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கிகள், வெடிகுண்டு பொருட்கள், வெடி மருந்துகள்,குண்டுகள் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29 கோவை வரவுள்ள நிலையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு கிளை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக போலீசார் என். ஐ. ஏ அதிகாரிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு முதல் இதுவரை விடுதலைப் புலிகள் தொடர்புடைய நான்கு வழக்குகளை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.
சேலத்தில் கைதான இரு இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பால் ஈர்க்கப்பட்டு அவர்களைப் போலவே மற்றொரு அமைப்பை உருவாக்கி போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர் ஹாஜி சலீமிடம் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தி வரும் குணசேகரன் மற்றும் புஷ்ப ராஜா ஆகியோரை குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
இவர்களுடன் தொடர்பிலுள்ள நபர்களை சந்தேகிக்கப்படுவதால் அவர்களையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.தமிழகத்தில் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ கடந்த மாதம் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்பவரை சென்னை விமான நிலையத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.மேலும் இது தொடர்பாக ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் நீண்ட நாட்களாக செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளில் உள்ள ஒட்டுமொத்த பணத்தையும் போலி ஆவணங்கள் பயன்படுத்தி அபகரிக்க முயற்சிப்பதாகவும் விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் ஒருங்கிணைக்கவும் மேலும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை தொடங்க உள்ளார்கள்.