ஈழத் தமிழர்களை காப்பதாக கூறி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் திமுகவிடம் தமிழனாக சில கேள்விகள்?
தேர்தலுக்கு தேர்தல் ஆட்சி மாறுவது போல தமிழகத்தில் திமுகவின் நிலைப்பாடும் அப்படியே மாறிக் கொண்டே இருக்கும் தங்களுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் என்ன தவறு செய்திருக்கிறார்கள் என்று எதையும் பேச மாட்டார். ஆனால் கூட்டணியில் சேராமல் இருக்கும் கட்சிகளை தன் இஷ்டத்திற்கு வசை பாடி வருவார்கள்.
அந்த வகையில் இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாக கூறும் திமுகவிடம் கேட்க சமூக வலைதளங்களில் பதிவான தமிழர்களின் சில கேள்விகள் உங்களுக்காக.
போன வாரம் பாராளுமன்றத்தில் ஈழ தமிழர்களால் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது அதனால் சோனியா காந்திக்கு கொடுக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு தொடர வேண்டும் என திமுகவின் பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கூறியிருக்கிறார். ஒரே வாரத்தில் எல்.டி.டி.இ ஆதரவு ஈழ தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை தர வேண்டும் என்கிறீர்கள் . இங்கே அவர்கள் நிரந்தரமாக தங்கினால் சோனியா காந்திக்கும் அவரது குடும்பத்திற்கும் பேராபத்து வராதா ?
ஈழ அகதிகளைக் காக்க இப்போது போராடும் திமுக போர் நிகழ்ந்த காலத்தில் காங்கிரஸோடு இணைந்து போரை நடத்தியது ஏன் ? அவர்கள் அகதியாக இங்கே வர நீங்களும் தானே முக்கிய காரணம் ??
இந்திய-இலங்கை உறவில் பிளவு வளருவதற்கு மிக முக்கிய காரணமே கச்ச தீவை தாரை வார்த்தது தானே அதனால் தான் தினம் தினம் இருநாட்டு மீனவர்களும் பிரச்சனை உருவாகி இருநாட்டு அரசு உறவு வரை பாதிப்பை உருவாக்கியது கச்சத்தீவு யாரால் எப்போது தாரை வார்க்கப்பட்டது நினைவு இருக்கிறதா ??
போரின் உச்சக்கட்ட நாளில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வந்த அதே நாளில் கலைஞர் கருணாநிதி தள்ளாத வயதில் தள்ளுவண்டியில் தள்ளிப் போய் தனது பேரன்களுக்கு பதவி கேட்டு போராடியது நினைவில் இல்லையா ?
போரில் தமிழினமே அழிக்கப்பட்ட போதும் தொடர்ந்து இன அழிப்பை நிகழ்த்திய காங்கிரசுடன் 2009 தேர்தலிலும் கூட்டணி வைத்து 2014 வரை அமைச்சரவையில் பங்கெடுத்தது நினைவில் இல்லையா ??
தமிழீழ தலைவர் பிரபாகரனின் தாயார் ஒரு நோயாளியாக சென்னைக்கு சிகிச்சை பெற வந்த போது கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் சிகிச்சைக் கூட பெற அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது யார்?
போர்க் குற்றவாளியான ராஜ பக்சே நடத்திய விருந்தில் திமுகவின் சார்பாக டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி கலந்து கொண்டு அங்கு அவர் வழங்கிய பரிசை இன்முகத்துடன் பெற்று கொண்டதன் சூழ்ச்சி என்ன?
மத்திய அரசின் கொடுங்கோல் சட்டங்களாக NIC திருத்தம் உள்ளிட்ட பல சட்ட மசோதாக்களை ஆதரித்துவிட்டு ஆர்ட்டிக்கிள் 370 நீக்கத்துக்கு கூட பெரிய போராட்டம் அறிவித்து பிறகு பெயரளவு போராட்டத்தோடு முடித்துக் கொண்ட நீங்கள் இதற்கு மட்டும் கொந்தளிப்பது ஏன் ?
ஈழ அகதிகள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களில் அவர்களின் அடிப்படை வசதிகளை நேரில் போய் என்றாவது ஆராய்ந்தது உண்டா ? சுமார் 10 ஆண்டுகளாக இங்கேயே தங்கி இருக்கும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க கோரி இதற்கு முன் பாராளுமன்றத்தில் வலுவான கோரிக்கையோ , ஆர்பாட்டமோ செய்தது உண்டா ?
இந்த சட்ட மசோதாவில் உங்களின் பாராளுமன்ற நிலைப்பாடு என்ன ? ஏன் மக்களின் நேரடி பிரதிநிதிகளாக திமுகவின் லோக் சபா MP கள் ஏன் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தீர்கள் ? நீங்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் மேல்சபையில் எதிர்ப்பு வாக்குகள் கூடி இருக்கும் அல்லவா ? ஏன் கீழவையில் வாக்களிக்காமல் மறைமுக ஆதரவு கொடுத்தீர்கள் ??? என பல விமர்சனங்கள் எழுந்த பிறகு அதை எதிர்த்து வாக்களித்தனர் என்று திமுக எம்பி கனிமொழி சார்பாக காலம் தாழ்ந்த விளக்கம் கொடுத்தது ஏன்?