தனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… எச்சரிக்கை மணி அடிக்கும் கபில்தேவ்
ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து உள்ளதாக கபில்தேவ் கூறியுள்ளார்.
இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர். இதைப் பார்த்த மற்ற நாடுகளும் இப்போது லீக் போட்டிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேசியுள்ளார்.
அதில் “இந்த விளையாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது ஐசிசிக்கு பெரிய பொறுப்பு. இது ஐரோப்பாவில் கால்பந்தாட்டத்துக்கு நடந்ததைப் போல ஆகப்போகிறது. அவர்கள் நாட்டிற்கும் எதிராக விளையாடுவதில்லை. உலககோப்பை போன்ற போட்டிகளில் மட்டும்தான். மற்ற நேரங்களில் கிளப் அணிகளுக்காதான் விளையாடுகிறார்கள். இது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை. இதைத்தானே நாம் பெறப் போகிறோம், உலகம் கோப்பை மற்றும் மீதமுள்ள நேரம் கிளப் கிரிக்கெட் விளையாடுகிறீர்களா.
எனவே ஒரு நாள் கிரிக்கெட், டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டின் உயிர்வாழ்வை எவ்வாறு உறுதிசெய்ய முடியும் என்பதைப் பார்க்க ஐசிசி அதிக நேரம் ஒதுக்க வேண்டும். ஐபிஎல், பிக்பாஷ் பரவாயில்லை. ஆனா தென்னாப்பிரிக்க லீக் வருகிறது. யுஏஇ லீக் வருகிறதுது. எல்லா நாடுகளும் கிளப் கிரிக்கெட் ஆடப் போகிறார்கள் என்றால், சர்வதேச கிரிக்கெட் என்ன ஆவது” என எச்சரிக்கும் விதமாக கூறியுள்ளார்.