குக்கரால் ப்ளிப்கார்டுக்கு வந்த சோதனை! ரூ ஒரு லட்சம் வரை அபராதம்!

0
79

குக்கரால் ப்ளிப்கார்டுக்கு வந்த சோதனை! ரூ ஒரு லட்சம் வரை அபராதம்!

இந்த டெக்னாலஜி உலகத்தில் மக்கள் சிறு பொருள்கள் எனத் தொடங்கி அனைத்தையும் ஆன்லைனிலேயே வாங்க ஆரம்பித்து விட்டனர். கடைக்கு சென்று பொருட்களின் தரம் விலை போன்றவற்றை பார்த்து வாங்குவதுடன் மக்கள் கொடுக்கும் ரிவ்யூவை வைத்து பொருட்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

அந்த வகையில் சில பொருள்கள் கடைகளை விட ஆன்லைன் ஷாப்பிங்கில் விலை குறைவாக கிடைக்கிறது. அதனின் தரத்தை பார்க்காமல் மக்கள் பலர் வாங்கி விடுகின்றனர். பின்பு அதனை உபயோகிக்கும் பொழுது தான் தரமற்றதாக உணர்கின்றனர். அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஆன்லைன் வர்த்தக சேவையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

இந்நிறுவனம் பெங்களூரில் எங்கு வருகிறது.இந்த நிறுவனம் தரமற்ற குக்கரை தொடர்ந்து விநியோகித்து வருவதற்கு அனுமதி அளித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் குவிந்தது.அதன் பேரில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பிளிப்கார்ட் மீது தரமற்ற பொருட்களை விநியோகிக்கிறது என்பதின் அடிப்படையில் ரூ ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும் தரமற்ற குக்கர்களை வாங்கியவர்களுக்கு அப்பணம் திருப்பி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.