வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?… இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

0
275

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?… இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு கே எல் ராகுல் தலைமை தாங்குகிறார். நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நடக்க உள்ளது. இந்திய நேரப்படி 12.45 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ள இந்தியா இந்த போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய அணியே இந்த போட்டியிலும் களமிறங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை தக்கவைக்க ஜிம்பாப்வே கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய உத்தேச அணி

ஷுப்மான் கில், ஷிகர் தவான், இஷான் கிஷன், கே.எல். ராகுல் (கேட்ச்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (வி.கே.), அக்சர் படேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

ஜிம்பாப்வே உத்தேச அணி

இன்னசென்ட் கையா, தடிவானாஷே மருமணி/தகுத்ஸ்வனாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, விக்டர் நியாச்சி

Previous articleவாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.
Next articleமீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here