போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!!

0
222
The fake rowdy gang who gave the police a dime!. Their style is better than the real officer!!
The fake rowdy gang who gave the police a dime!. Their style is better than the real officer!!

போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!!

பீகாரில் பாங்கா மாவட்டத்தில் ஒரு பெரிய ரவுடி கும்பல் உலவியது.இந்த ரவுடி கும்பலில் இருப்பவர்களுக்கு கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட பல தில்லாலங்கடி வேலைகளை செய்துவருகிறார்கள்.

இந்த ரவுடி கும்பல் போலியான ஒரு காவல் நிலையத்தையும் நடத்தி வருகின்றனர்.இதனால் சுலபமாக மக்களிடம் இருந்து பணத்தை பறித்து கைவரிசையை கட்டி வந்திருந்தனர்.இந்த ஆண்டு கடந்த மாதம் பாங்கா நகரில் உள்ள அனுராக் கெஸ்ட் ஹவுஸ் என்ற ஹோட்டலை தேர்ந்தெடுத்த ஆறு ரவுடிகள் அங்குள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து போலீஸ் நிலையமாக மாற்றி கொண்டனர்.

அந்த ரவுடி கும்பலில் இரு பெண்களும் இருந்தனர்.காவலர், தலைமைக் காவலர், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் என்ற கிரேடு வாரியாக போலீஸ் உடைகளையும் வாங்கி அவர்கள் அணிந்து கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகளை அவர்களின் சட்டை பைகளில் மறைத்து வைத்துக் கொண்டனர்.

பார்ப்பவர்களுக்கு சிறிதும் சந்தேகம் வராத வகையில் அவர்கள் தன்னை ஒரிஜினல் போலீஸ்காரர்களாகவே மாற்றி கொண்டனர்.இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அப்பகுதியில் உள்ள நிஜ போலீஸ் உயர் அதிகாரியின் வீட்டுக்கு அருகில்தான் அவர்கள் போலி போலீஸ் நிலையத்தை அமைத்திருந்தனர்.

இதனால் பொதுமக்கள் யாருக்கும் இவர்கள் மீது சந்தேகம் வரவில்லை.போலீஸ் நிலையம் அமைக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அப்பகுதி மக்கள் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் வர தொடங்கினர். அவ்வாறு வரும் புகாரை பொறுத்து ரவுடி போலீசார் பணம் பறிக்க தொடங்கினர்.

மேலும் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்தும் அவர்கள் மாமூல் வசூலிக்க தொடங்கினர். இதனால் மாதந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை அவர்களுக்கு கிடைத்தது. இவ்வாறு எட்டு மாதங்களாக போலி போலீஸ் நிலையத்தை அவர்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த நிஜ போலீஸ் ஒருவர் இந்த போலி போலீசில் ஒருவரை சந்தேகப்பட்டு பிடித்து உள்ளார். அப்போது அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கி வகையைச் சேர்ந்தது என்பதை அவர் கண்டறிந்தார்.

இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட நபர்களை கண்காணித்த போது அவர்கள் போலி போலீசார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பதினாறாம் ஆம் தேதியன்று போலி காவல் நிலையத்துக்கு சென்ற பத்திற்கும் மேற்பட்ட போலீசார், போலீஸ் உடையில் இருந்த ரவுடிகளை உடனடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள் போலி முத்திரைகள் உள்ளிட்ட பல  ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Previous articleசென்னையில் படிப்படியாக உயர்வு! பெண்கள் உற்சாகம் !
Next articleஆபத்தை உணராமல் டிரைவர் செய்த காரியம் ! ஏரில் பறந்த ஆட்டோ!