பிரியாணிகளில் பலவகை அதிலும் இது ஒரு வகை பனீர் பிரியாணி!. சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம்!…

0
139

பிரியாணிகளில் பலவகை அதிலும் இது ஒரு வகை பனீர் பிரியாணி!. சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம்!…

 

இதற்கு முதலில் நாம் அனைவரும் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்வோம்.  தேவையான பொருள்கள்! பாசுமதி அரிசி – 2 டம்ளர், பனீர் – ஒரு பாக்கெட், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் – சிறிது, இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, பட்டை கிராம்பு ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டி, பிரியாணி இலை – ஒன்று, கல்பாசி இலை – சிறிது, ஏலக்காய் கிராம்பு தலா – 3, பட்டை – சிறு துண்டு, எலுமிச்சை – பாதி பழம், புளிக்காத தயிர் – ஒரு குழிக்கரண்டி, பச்சை பட்டாணி – சிறிது ஒரு கைப்பிடி அளவு, மல்லி இலை – சிறிது, புதினா – சிறிது, நெய் – 4 தேக்கரண்டி, எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்!.செய்முறை தக்காளி, வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பனீரை சிறுத் துண்டுகளாக நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து வைக்கவும்.அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி இலை, பிரியாணி இலை போட்டு தாளித்து பின் வெங்காயம், தக்காளி, மிளகாய், பச்சை பட்டாணி போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.அதனுடன் தயிர் சேர்த்து கிளறி விட்டு 3 1/2 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.கொதி வந்ததும் அரிசியை போட்டு தண்ணீர் வற்றி வரும் பொழுது சிம்மில் வைத்து புதினா, மல்லி இலை, லெமன் சாறு, நெய், பனீர் சேர்த்து மூடியை போட்டு மூடவும். பின்னர் வெய்ட் போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்ஆவி போனதும் மூடியை திறந்து ஒரு முறை அடி வரை கிளறி வைக்கவும்.இப்போது சுவையான பனீர் பிரியாணி ரெடி.

 

Previous articleஇதற்கு ஒரு முடிவே இல்லையா? டீக்கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன்! காரணம் என்ன?
Next article10 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!..இன்று துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு…