லாரி மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பொட்டனேரியை சேர்ந்தவர் செந்தில்குமார். மேட்டூர் அருகே ஒர்க் ஷாப் கார்னரில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் செந்தில்குமார் உழியராக வேலை பார்த்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் அவருடைய மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தார். அதே பகுதியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியானது மோட்டர்சைகளின் மீது மோதியது.அந்த விபத்தில் செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டார்.
மேலும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலனின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செந்தில்குமார் உடலை கைப்பற்றி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.