ஆன்லைனில் முறுக்கு விற்றதால் 1 கோடி வருமானம்:! அசத்தும் பெண்மணி!!
கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த காலகட்டத்தை தனக்கு பொற்காலமாக மாற்றிய பெண்மணி!!
மும்பையைச் சார்ந்த கீதா பாண்டே என்பவர் முறுக்கு உள்ளிட்ட பல எண்ணெய் வகை பலகாரங்களை செய்து ஆன்லைனில் சந்தைப்படுத்தினார்.பலகாரங்கள் சுவையாகவும், சுத்தமாகவும் இருந்ததனால் மக்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இவர் மற்ற பலகாரங்களை விட முறுக்கை அதிகம்
விற்றார்.இதனால் அவருக்கு ஓராண்டில் 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக பெருமையுடன் கூறுகிறார்.எந்த வேலையாக இருந்தால் என்ன,செய்யும் வேலையை விரும்பியும்,
திறமையுடனும் முயற்சித்தாலே போதும் சாதித்துக் காட்டலாம் என்பதற்கு இந்த பெண்மணியே எடுத்துக்காட்டு.இப்பொழுது முறுக்கு வியாபாரத்தில் இந்த பெண்மணி ஒரு தொழில் அதிபராக வளர்ந்து நிற்கிறார்.