5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் HFMD காய்ச்சல்:! இது உயிர் கொல்லி நோயா!! மருத்துவர்கள் கூறுவது!!

0
127

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் HFMD காய்ச்சல்:! இது உயிர் கொல்லி நோயா!! மருத்துவர்கள் கூறுவது!!

தற்போது தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படும் Hand food mouth disease குழந்தைகளுக்கு பரவலாக பரவி வருகிறது.இந்த நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

HFMD என்னும் நோய் ஒரு வகை வைரசினால் பரவுகிறது.இந்த வைரஸினால் ஏற்படும் கொப்புளங்கள் அதாவது ரேசஸ் தக்காளியை போன்று சிவப்பு நிறமாக உள்ளதால் இது தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.இந்த நோய்க்கும் தக்காளிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இந்த நோய் எவ்வாறு பரவுகிறது?

இந்த HFMD வைரஸ் பொதுவாக 5 வயதிற்கு உட்பட்ட ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளை அதிகமாக தாக்கும் தன்மை உடையது.வெகு பரவலாக 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பரவலாம்.

இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒருவரை ஒருவர் தொடும்பொழுது அல்லது விளையாடும் பொழுது இந்த நோயானது எளிதில் பரவுகிறது.

இதன் அறிகுறி என்ன?

முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் கடுமையான காய்ச்சல் இருக்கக்கூடும்.பிறகு டயப்பர் ஏரியாவில் ரேசஸ் இருக்கக்கூடும்.பின்பு இந்த ரேசஸ் ஆனது குழந்தையின் முழங்கால் பகுதி மற்றும் உள்ளங்கால் பகுதி,உள்ளங்கை பகுதி,வாய்ப்பகுதி போன்ற இடங்களில் வரக்கூடும்.சில குழந்தைகளுக்கு குழந்தையின் நாக்கில் கூட வரக்கூடும்.

இந்த நோய் பாதித்தால் குழந்தைகளை தனிமை படுத்த வேண்டுமா?

இந்த நோயினால் ஏற்படும் ரேசஸ் ஒரு குழந்தையினிடமிருந்து மற்றொரு குழந்தைக்கு எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதனால்,நோய் பாதித்த குழந்தைகளை மற்ற குழந்தைகளிடமிருந்து விளையாடவிடாமல் தனிமைப்படுத்துவது நல்லது.

இந்த நோய் வந்தால் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை!!

தக்காளி காய்ச்சல் பாதித்த சில குழந்தைகளுக்கு நாக்கில் கொப்புளம் ஏற்பட்டு உடைய கூடும். இதனால் குழந்தைகளுக்கு வாய்ப்புண் ஏற்படும்.இதன் காரணமாக குழந்தைகள் அழுது கொண்டே சாப்பிட மறுப்பார்கள்.

சில குழந்தைகளுக்கு இந்த ரேசஸ் அரிப்பினை தரும்.

சில குழந்தைகள் உடல் சோர்வாக உணரப்படுவார்கள்.

தக்காளி காய்ச்சலுக்கான மருத்துவம் என்ன!!

இதற்கென்று தனிப்பட்ட மருத்துவம் எதுவும் கிடையாது.குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்குமேயானால் காய்ச்சல் மருந்தையும், ரேசஸ் அதிகம் இருக்குமேயானால் அதன் மீது போடுவதற்கு லோஷன் அல்லது கிரீம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும்.அரிப்பு இருக்கும் குழந்தைகளுக்கு தோல் அரிப்பினை சரி செய்யும் டானிக் மருத்துவரகலால் பரிந்துரைக்க படலாம்.

இந்த காய்ச்சலை கண்டு பெருமளவு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.சாதாரணமாகவே இந்த நோயானது 5-லிருந்து 10 நாட்களுக்குள் குணமடைந்து விடும்.இது உயிர் கொல்லி நோய் என்று பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.நம் குழந்தையிடம் இருந்து மற்ற குழந்தைகளுக்கு பரவாமல் பார்த்துக் கொண்டாலே போதும்.