பிரதமர் இடைநீக்கம்! பரபரப்பில் கட்சி தலைமையகம்!
பிரதமர் பிரயுத் சான்ஓச்சா தாய்லாந்து ராணுவ தலைமை தளபதியாக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பொறுப்பு ஏற்றார்.அதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் அப்போது இருந்த மக்கள் ஜனநாயக சீர்திருத்த கட்சி தலைவர் யிங்லக் ஷினவத்ராவின் ஆட்ச்சிக்கு எதிராக எதிர்கட்ச்சியினர் போராட்ட்டம் நடத்தினார்கள்.
அந்த போராட்டத்தில் ராணுவமும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.அப்போது ஷினவத்ராவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த அரசியல் சாகன நீதிமன்றம் அவரை பதவியில் இருந்து விளக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் அவரது தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசிடம் கேட்டகாமல் ராணுவ சட்டத்தை பிரயுத் அமல் படுத்தினார்.பின்னர் யிங்லக் ஷினவத்ராவின் இடைக்கால ஆட்சியைக் முடக்கினார்.பிறகு அரசர் இடைக்கால ஆட்சியாளராக பிரியுத் பொறுப்பேற்று கொண்டார்.
அதனைதொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு பிரயுத்தை நாடளுமன்றம் பிரதமராக தேர்ந்தெடுத்தனர் இதற்கிடையே தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கான கால வரம்பை 8ஆண்டுகளாக நியமித்து பிரயுத் தலைமியிலான அரசு கடந்த 2017 ஆம் ஆண்டில் அரசியல் சாசனத் திருத்தத்தை செய்திருந்தது.
அரசமைப்பு சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் அவரது பதவிக் காலத்தை கணக்கிட வேண்டும் என்று பிரயுத் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.மேலும் இது தொடர்பான மனு விசாரணைக்கு வரும் வரை பிரதமர் பதவியில்லிருந்து பிரயுத் விலக வேண்டும் எனவும் நேற்று நீதிமன்றம் தீர்பளித்துள்ளது