வரும் ஆனா வராது!.. டிப் டாப் ஆ..வந்த திருடன்?பறிபோன மூதாட்டியின் நகை?
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒரு டவுன் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் தான் லட்சுமி அம்மாள்.இங்கு சிக்கன் வாங்க தினமும் கூட்டம் அலைமோதும்.அந்த சிக்கன் கடையில் தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.அப்போது மூதாட்டியான லட்சுமி அம்மாளை அடையாளம் தெரியாத நபர் நோட்டம் போட்டு கொண்டிருந்தார்.
அந்த நபரும் சம்பவத்தென்று மூதாட்டியின் சிக்கன் கடைக்கு சிக்கன் வாங்க சென்றுள்ளார்.சிக்கனையும் வாங்கி விட்டு செல்லும் நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க நகை பற்றி கேக்க தொடங்கியுள்ளார்.மூதாட்டியோ நகைகளை பற்றி விரிவாக எல்லாவற்றையும் கூறியுள்ளார்.
பிறகு அந்த மர்ம நபர் தன் மனைவி அருகில் இருக்கும் கடையில் காய்கறி வாங்க சென்றுள்ளார் நீங்கள் இந்த நகையை கொடுங்கள் நான் சென்று என் மனைவியிடம் காட்டி விட்டு வருகிறேன் என்றார்.இதை நம்பி கொண்டு மூதாட்டியோ தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி கொடுத்துள்ளார்.வெகு நேரம் ஆகியும் நகையை வாங்கி சென்ற நபர் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி ஏற்காடு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் சிக்கன் கடைக்கு அருகில் உள்ள கடையில் சிசிடிவி கேமரா உதவியுடன் நகையை திருடி சென்ற குற்றவாளியை தேடி வருகின்றனர்.பட்ட பகலில் இந்த பகுதியில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.