Breaking: இளம் இயக்குனர் மணி நாகராஜ் திடீர் மரணம்!! தமிழ் திரை உலகம் அதிர்ச்சி!!

0
164

Breaking: இளம் இயக்குனர் மணி நாகராஜ் திடீர் மரணம்!! தமிழ் திரை உலகம் அதிர்ச்சி!!

ஜிவி பிரகாஷை முதன் முதலில் நடிகராக பென்சில் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய, இளம் இயக்குனரான மணி நாகராஜ் சற்றுமுன் உயிரிழந்தார்.இவர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பென்சில் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு சில ஆண்டுகள் ஆனாலும், விமர்சன ரீதியில் படமானது வெற்றி அடைந்தது.

இதற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை அவர் கவனித்து வந்தார். அதிலும் மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த டைமண்ட் நெக்லஸ் மற்றும் Zachariayude Garbhinikal உள்ளிட்ட திரைப்படங்களின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் Zachariayude Garbhinigal படத்தை நீயா நானா கோபிநாத் நடிப்பில் “வாசுவின் கர்ப்பிணிகள்” என்ற பெயரில் படமாக்கியுள்ளார். தற்போது அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் இன்று மதியம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணி நாகராஜ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். திருச்சியை சேர்ந்த மணி நாகராஜ் 46 வயது நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பென்சில் திரைப்படத்திற்கு பிறகே இயக்குனர் அந்தஸ்தை பதித்த இளம் வயதான இவர் இறந்தது,தமிழ் திரை உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.எனினும் இவர் இறந்ததற்கான சரியான காரணம் எதுவும் தெரியவில்லை.

author avatar
Pavithra