மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்!சொன்னது யார் தெரியுமா?

0
150

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் இறங்கினர். சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மற்றும் நடிகர் சித்தார்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

தி. மு. க. வினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே தமிழ்நாடு முழுவதும் வரும் 23ஆம் தேதி எதிர்க் கட்சிகள் சார்பாக போராட்டம் நடத்தப்படுகிறது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகளை கண்டித்து மதுரையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

“பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்த குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க படவில்லை என்றும்.

இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.
குடியுரிமை சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாட்டுக்காக போராடவில்லை என்றும் ஓட்டுக்காக போராடி வருகிறார்கள் என்று இல. கணேசன் கூறினார்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக வாழுகின்றனர். இந்தியா முழுவதும் லஞ்சத்தை ஒழிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் முதலில் சிக்கியது ப.சிதம்பரம் தான்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவில் உள்ள வரலாற்று பிழைகளை பிரதமர் திருத்தி வருகிறார், வரலாறு தெரியாதவர்கள் வரலாற்றை மறந்தவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.

குடியுரிமை சட்டம் குறித்து மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது என்று கூறினார்

குடியுரிமை இல்லாமல் பாகிஸ்தானில் இருந்து வந்த 31 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இந்தியாவில் இருந்து யாரையும் வெளியேற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல என கூறிய அவர், பொய் பிரசாரத்தை நம்பாமல் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.