சேலத்தில் பாமக எம்.எல்.ஏ திடீர் விசிட்? நெகிழ்ச்சியில் தொகுதி மக்கள்

Photo of author

By CineDesk

சேலத்தில் பாமக எம்.எல்.ஏ திடீர் விசிட்? நெகிழ்ச்சியில் தொகுதி மக்கள்

CineDesk

Updated on:

Excitement in Salem? Assembly member who heard people's grievances!

சேலத்தில் பாமக எம்.எல்.ஏ திடீர் விசிட்? நெகிழ்ச்சியில் தொகுதி மக்கள்

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாக பாமகவை சேர்ந்த அருள் பதவி வகித்து வருகிறார். இவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.அடிக்கடி தொகுதியுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சட்டமன்றத்தில் அவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் மேற்கு தொகுதி, அஸ்தம்பட்டி பகுதி,  4வது கோட்டம் ராமக்குட்டை பகுதியில் உள்ள மக்களை நேற்று சேலம் மேற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்கள் நேரில் சந்தித்தார்.

மேலும் அவர் வருவதை அறிந்த ஊர் மக்கள் அனைவரும் அவரை சூழ்ந்து நின்று கொண்டனர். அங்கிருந்த சிலர் தன்னுடைய குறைகளை ஒவ்வொன்றாக அவரிடம் கூற தொடங்கினர். ஊர் மக்களின் குறைகளை கேட்ட அவர் விரைவில் செய்து முடிப்பதாக உறுதி அளித்தார்.

பிறகு அவர் கூறியதை கேட்ட மக்கள் அனைவரும்  மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.