குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!                 

0
129

குழந்தைகள் விரும்பி உண்ணும் கம்பு குழிப் பணியாரம் ரெசிபி இதோ..!!

 

பொதுவாக கம்பு என்றவுடன் அனைவரின் நினைவிலும் வருவது கம்பங்களியும், கம்பங்கூழும் தான். அவை மட்டும் தானா? கம்பில் விதவிதமான சுவையான பல பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளையும் தயாரிக்கலாம். கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு புட்டு, கம்பு வடை, கம்பு சட்னி என்று பல பல காரவகைகளில் தொடங்கி, கம்பு சாதம், கம்பு பிஸிபேளாபாத், கம்பு தயிர் சாதம், கம்பு பிரியாணி என கம்பில் செய்யும் உணவுகளை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் நாம் கம்பை வைத்து எவ்வாறு எளிமையான கம்பு குழிப் பணியாரம் செய்வது என்று பார்ப்போம்.

அதற்கு தேவையான பொருட்கள்: பச்சரிசி, இட்லி அரிசி, கம்பு – ஒரு கப்,உளுத்தம் பருப்பு – கால் கப்,வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,சின்ன வெங்காயம் – ஒரு கையளவு,தேங்காய் துருவல் – கால் கப். தாளிக்க: கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு. பச்சரிசி, இட்லி அரிசி, கம்பு, உளுந்துக் கலவையுடன் வெந்தயம் சேர்த்து, ஐந்து மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதை ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்கவிடவும்.தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, மாவில் கலக்கவும். இதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயம் சேர்த்துக் கலக்கவும். குழிப் பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு இந்த மாவை ஊற்றி, இரண்டு முறை திருப்பிப் போட்டு, முறுகலானதும் எடுக்கவும்.  தேங்காய் சட்னி அல்லது பொடியுடன் சேர்த்துச் சாப்பிட, சுவையாக இருக்கும். இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. சுவையான நொறுக்குத் தீனி என்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, மாதவிலக்குப் பிரச்சனைகள் நீங்கும்.

 

 

Previous articleவெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் அதிகரிக்கும்!