இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!             

0
181

இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!

 

 

ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க நாட்கள் வரும்.அதன்படி இம்மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.அமாவாசை என்பது முன்னோர்களுக்கான படைக்கப்பட்ட நாள்களாகும். பித்ருக்களை வழிபடுவதற்கான அற்புதம் நிறைந்த நாள். மாதந்தோறும் வருகிற அமாவாசையில் தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து முன்னோர்களை ஆராதித்து அவர்களை வணங்கினால் நாமும் நம் சந்ததியினரும் வளமுடன் வாழ்வோம் என்பது உறுதி. முக்கியமாக பித்ரு சாபம் இல்லாமல் பெருமகிழ்வுடன் வாழலாம் என்கின்றனர்.

அந்த வகையில் ஆவணி மாத அமாவாசை நாளன்று முன்னோர்களுக்கு ஆராதனை தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறலாம்.திதி மற்றும் தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அமாவாசை நாளில் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யுங்கள்.வீட்டில் உள்ள நம் முன்னோர்களின் படங்களுக்கு, பூக்களால் அலங்கரித்து தீப தூப ஆராதனைகள் காட்டுங்கள். மேலும் படங்களுக்கு சந்தனம், குங்குமம் இடுங்கள்.முன்னோர்களை நினைத்து தினமும் காகத்திற்கு உணவிடுவது நம் குலத்தையும் வம்சத்தையும் வாழ வழி செய்யும்.அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து செய்கிற காரியங்கள் அனைத்துமே, அவர்களை போய் சேரும் என்று நம்பப்படுகிறது. ஆகவே, ஆவணி அமாவாசையன்று, முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்து ஆசியை பெறுங்கள்.

 

Previous articleமாதம் 35 ஆயிரம் சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலைகள்! உடனே விண்ணப்பியுங்கள்!
Next articleதினம் ஒரு திருத்தலம்.. என்னாது? ஆறடி உயரத்தில் மூலவர்… சிலை வடிவில் வேல்களா..!!