ரஜினியின் குடியுரிமை டுவிட் குறித்து அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்!

Photo of author

By CineDesk

ரஜினியின் குடியுரிமை டுவிட் குறித்து அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்!

ஒரு பிரச்சனை குறித்து ரஜினி என்ன சொல்வார்? அதிலிருந்து என்ன குறைகளை கண்டுபிடித்து அவரை விமர்சனம் செய்யலாம் என்று ஒரு பெரிய கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து நேற்று இரவு ரஜினிகாந்த் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது: ’எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது என்றும் தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கிறது.

ரஜினியின் இந்த கருத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வந்தாலும் போராட்டத்தை தூண்டி விடும் ஒரு சில அரசியல்வாதிகள் மட்டும் இந்த கருத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதே கருத்தை தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய போது அவரை யாருமே விமர்சனம் செய்யாத நிலையில், ரஜினியை மட்டும் குறிவைத்து அனைத்து அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்து வருவது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ரஜினி பதிவு செய்த டுவிட் குறித்து கூறியபோது ’போராட்டமே தேவையில்லை என ரஜினிகாந்த் கூறவில்லை என்றும் வன்முறை தீர்வாகாது என்று தான் அவர் கூறியதாகவும் விளக்கமளித்தார். ஜெயக்குமாரின் இந்த விளக்கத்தை அடுத்து ரஜினியின் கருத்தை அதிமுக ஆதரிப்பதாக கருதப்படுகிறது.