மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாட்ஸ்அப்! வன்மையாக கண்டித்த உயர் நீதிமன்றம்!

0
189
WhatsApp to warn people! The High Court strongly condemned!
WhatsApp to warn people! The High Court strongly condemned!

மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாட்ஸ்அப்! வன்மையாக கண்டித்த உயர் நீதிமன்றம்!

வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கையை எதிர்த்து மனு  டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வு நேற்று விசாரணையை தொடங்கியது. அப்போது அவர்கள் திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளை பயனர்களை ஏற்றுகொள்ள வைக்க வேண்டும் என்ற தீவர முயற்சியில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

மேலும் தனியுரிமை கொள்கையை ஏற்றுகொள்ளக அல்லது வெளியேறு என பயனர்களை எச்சரித்து அவர்களின் கொள்கைகளுக்கு ஒப்புதல் பெற தந்திரமாக செயல்படுகிறது எனவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.இதனை தொடர்ந்து நீதிபதிகள் புதிய கொள்கைகளை ஏற்குமாறு பயனர்களுக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பி கட்டாயப்படுத்துவதும். இந்திய போட்டி நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உள்ளது எனவும் கண்டித்தனர்.

அதன் பிறகு திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளை ஏற்று கொள்ளாத பயனர்களின் கணக்கு பிப்ரவரி 8ம் தேதிக்கு பின் நீக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்தது சர்ச்சையானது. இதனிடையே வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் வாட்ஸ் அப் பகிர்வதாக குற்றம்சாட்டிய பயனர்கள், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாறியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்கள்.

Previous articleசெல்வம் பெருக! வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு!
Next articleஆசியக் கோப்பையில் கோலி & ரோஹித் ஷர்மா படைக்க உள்ள சாதனைகள்!