காதலால் வந்த விபரீதம்! இந்தபகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு!

Photo of author

By CineDesk

காதலால் வந்த விபரீதம்! இந்தபகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு!

CineDesk

Updated on:

tragedy-caused-by-love-144-prohibition-order-only-in-this-area

காதலால் வந்த விபரீதம்! இந்தபகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு!

ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி அங்கிதா குமாரி. இவரை  இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்துள்ளார். அப்போது அவரது காதலை ஏற்க அந்த மாணவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்  மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்த மாணவி  மீட்கப்பட்டு புலோ ஜனோ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கிராம மக்கள் ஆத்திரமடைந்து  தும்கா நகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தும்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆம்பர் லக்டா கூறுகையில் குற்றவாளியான ஷாருக் என்பவரை கைது செய்துள்ளோம். விரைவாக விசாரணை நடத்துவதற்காக விரைவு நீதிமன்றத்தில் வழக்குபதிவு செய்வோம் என அவர் கூறியுள்ளார். அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.