“ரூல்ஸ் அனைவருக்கும் ஒன்றுதான்” – ட்ராவிட் அதிரடி.

0
164

மேற்கிந்திய தீவுகளில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த ஜஸ்பிரிட் பும்ரா, சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் அவரது உடல்நலம் குணமடைந்தைத் தொடர்ந்து பும்ரா, தனது உடற்தகுதித் தேர்வு மற்றும் பயிற்சிக்கு தனியார் மருத்துவர்களையும், பயிற்சியாளர்களையும் நியமித்தார். பிசிசிஐ விதிப்படி இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களின் உடற்தகுதித் தேர்வைப் பெங்களூரிலுள்ள ட்ராவிட் தலைவராக இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று, உடற்தகுதித் தேர்வு பெற்றபின்தான் அணிக்குள் வர முடியும்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை பும்ராவுக்கு உடற்தகுதித் தேர்வு நடத்த என்சிஏ தலைவர் திராவிட்டும், உடற்தகுதித் தேர்வாளர் ஆஷிஸ் கவுசி்க் ஆகியோர் திட்டமிட்டிருத்த நிலையில்; என்சிஏ அமைப்பில் பயிற்சி பெற ஆர்வமில்லாமல் விசாகப்பட்டிணத்தில் இந்திய அணியோடு பயிற்சியில் பும்ரா ஈடுபட்டுள்ளார். பும்ராவின் இந்த செயல்பாடுகளினால் ஆத்திரமடைந்த ராகுல் திராவிட்,  உடற்தகுதி தேர்வு நடத்த முடியாது என்று கூறிவிட்டார்.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘எனக்கு பும்ரா, திராவிட் விவகாரம் குறித்து தெளிவாக தெரியாது. ஆனால் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் என்சிஏவில் பயிற்சி பெற்று, உடற்தகுதி தேர்வை நிரூபித்து அதன்பின்தான் இந்திய அணிக்குள் வர வேண்டும். அதுதான் வழிமுறை’ என்றார். திராவிட் மீது எனக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது, மிகச்சிறந்த வீரர், அவரின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருக்கும். திராவிட் தலைமையில் என்சிஏ சிறப்பாக உருவாகும் என கங்குலி தெரிவித்துள்ளார்.

Previous articleபிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து – உளவுத்துறை.
Next articleபிரேம்ஜி ஹீரோ, 80 வயது கிழவி வில்லி: பிக்பாஸ் ரேஷ்மா காதலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here