தேனியில்  அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா! அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்!பொதுமக்கள் கூட்டம்!

Photo of author

By Rupa

தேனியில்  அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா! அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்!பொதுமக்கள் கூட்டம்!

Rupa

Adhikala Mata Temple Consecration Ceremony in Theni! Crowds of people!
தேனியில்  அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா! அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பேருந்து நிலையம் அருகில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் அடைக்கல மாதா ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது.பழமை வாய்ந்த ஆலயம் சிதிலம்  அடைந்ததால் புதிய கற்கோவில் கட்டப்பட்டு, மதுரை மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக விழாவிற்கு  வருகை புரிந்த பிஷப்பிற்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு பிஷப் தலைமையில் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக வந்து ஆலயத்தில் ,வரவேற்பு நடனத்தை ஏற்று சென்று கல்வெட்டினை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ரிப்பன் வெட்டி ஆலயத்தை திறந்து அர்ச்சித்தார் . தொடர்ந்து பாடல் திருப்பலி நடைபெற்றது. கோவிலில் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய இடங்களில் இருந்து அருள் சாதனங்கள் ,திருப்பண்டங்கள் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு ஆலயம் மின்விளக்குகளால் ஜொலித்தது.  ஏற்பாடுகளை தேனி பங்குத்தந்தை முத்து மற்றும் ஆண்டிபட்டி கிளை பங்கை  சேர்ந்த உறுப்பினர்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து  குருமார்கள், அருட்சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.