எங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!..
கடந்த மாதம் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் தமிழ்நாடு முழுவதும் ஷவர்மா கடைகளில் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர். இந்நிலையில் சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு இழுத்து மூடப்படும் என தமிழக அரசு எச்சரித்தது.
தற்போது கேரள மாநிலத்தில் ஷவர்மா தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் அம்மாநில அரசு அதற்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.ஷவர்மா தயாரிப்பதற்கு உரிய உரிமம் பெறத் தவறினால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் மற்றும் ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என கூறியிருந்தது.அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி சில மணி நேரம் கழித்து ஷாவர்மாவில் மீதமுள்ள இறைச்சியைப் பயன்படுத்த கூடாது.
பார்சலில் தேதி மற்றும் நேரம் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும். வாங்கிய ஒரு மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என்பதையும் துல்லியமாக பதிவு செய்ய வேண்டும்.ஷாவர்மா சாப்பிடுவதால், உணவு நச்சுத்தன்மை ஏற்படும் சூழலில் அரசு புதிய வழிகாட்டுதல்களை கொண்டு வந்துள்ளது.அதன்படிஅனைத்து உணவு தயாரிப்புகளுக்கும் உணவு பாதுகாப்பு உரிமம் தேவை.
ஷவர்மாவுக்கும் இது பொருந்தும். சமையல் செய்பவர் மற்றும் சப்ளை செய்பவர் இருவரும் மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு உரிமம் பெற்ற அதற்கு தகுதியானவர்களாக இடம் பெற்றிருக்க வேண்டும்.மேற்படி வழிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மூடப்படும் என தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.எனவே ஷவர்மா சாப்பிடும் அனைவரும் சரியான குறியீடு மற்றும் லேபில் இருப்பதை சரி பார்த்து வாங்க வேண்டும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.