பழனியில் வெள்ளப்பெருக்கு! தென்னந்தோப்பில் இடுப்பளவு தண்ணீர்!

0
244

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் தரை பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் குளங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரவு செய்த கனமழை காரணமாக பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி உடையார் பாலம் பகுதிகளில் பாலம் செய்தமடைந்து தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. தென்னை மரம் வைத்துள்ள பகுதிகளில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

ராசாபுரம் பகுதியில் உள்ள தரைபாலம் சேதமடைந்துள்ளது. புதிய பாலங்கள் கட்ட வேலைகள் நடைபெற்ற பொழுதும் கனமழை காரணமாக வேலை தடைபட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அங்குள்ள ஐந்து கிராமங்களில் போக்குவரத்து தரை பாலம் அடுத்த சொல்லப்பட்டுள்ளதால் தடைபட்டுள்ளது. இதனால் பழனிக்கு வரும் மக்கள் புளியம்பட்டி பாலசமுத்திரம் ஆகிய பகுதியை சுற்றி பழனிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

உடனடியாக அப்பகுதியை சீர் செய்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சீர் செய்து தரும்படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!!
Next articleமாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு! உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் இலவசம்!