புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா?
புங்கன் மரம் என்பது குளிர்ச்சி மிக்க ஆயுர்வேத மரங்களாகும்.புங்கை அல்லது புங்கு முட்டை வடிவ சிறிய இலைகளையும் வெண்மை நிறப்பூக்களையும் நீள்சதுர காய்களை கொண்ட மர வகையை சார்ந்தது.இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர்ப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணமுடையது.
இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து இம்மரத்தின் கிளைகள் அதிகமான குளிர்ச்சி நிறைந்த காற்றை நமக்கு கொடுக்கும். இம்மரம் காற்றில் உள்ள மாசுக்களை கார்பன்டை ஆக்ஸைடு வடிக்கட்டி நல்ல காற்றினை நமக்கு தந்து வருகிறது.
அதேபோல் இம்மரம் வளிமண்டலத்தில் உள்ள காற்றினை சுலபமாக மாசில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. காற்றில் உள்ள வெப்பத்தை தணிக்கும் திறன் கொண்டது.
வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காற்று குளிர்காற்றாக மாறும்.
அதன்மூலம் நம்மை தாக்கும் வெயிலில் வெப்பத்தினையும் குறைக்கும். இந்த மரத்தின் வேர் கடினப் பாறைகளை, வீட்டு சுவர்களை துளையிடாமல், மண் பகுதிகளுக்குள்ளேயே சுற்றி சுற்றி செல்லும் திறன் கொண்டதால், வீடுகளின் அஸ்திவாரங்களையோ அல்லது சுவர்களையோ பாதிக்காது.
காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று. புங்கன் மரம் அதிக உயரம் வளர்வது இல்லை. மெதுவாக வளரும் தன்மை உடையது.விதை மூலம் இனப்பெருக்கம் செய்வது அதிகம். ஆனால் குச்சிகளை கொண்டும் வளர்க்கப்படுகின்றன. அதிவேக புயல் காற்றில் கூட சாயாமல் இருக்கும். ஆணிவேர் நீளமாக காணப்படும்.
புங்கன் மரக்காற்று குளிர்ச்சியானது.அதனால்
வீட்டில் ஒரு மரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது அடர்ந்த பசுமையான இலைகளை கொண்டதால் நல்ல நிழலை தரக்கூடியது. இந்த மரம் வீட்டிற்கு அருகில் இருந்தால் நச்சு கிருமிகளின் பாதிப்பை தடுக்கிறது.
தெற்கு, மேற்கு பகுதிகளில் புங்கை மரங்களை வளர்க்கலாம். இந்த மரம் வளர்ப்பதினால் மனிதர்களுக்கு பல வகையான நன்மைகளை அளித்து வருகின்றது. நீங்களும் இன்றிலிருந்து இந்த மரத்தினை வளர்க்கலாம்.