கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா?

0
150
Medical workers protested in front of the collector's office!! Will the government take action?
Medical workers protested in front of the collector's office!! Will the government take action?

கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா?

திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கால கட்டத்தில் விலைவாசி உயர்வை மதிப்பிட்டு கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும் வங்கி கணக்கு மூலமாக வழங்க கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் நலச்சங்கம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் மக்களின் வீடுகளுக்குகே தேடிச்சென்று மருந்துவம் பார்ப்பதும்.

அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கவும் சுகாதார தன்னார்வலர் என்ற பெயரில், இளம்பெண்கள் உள்ளிட்ட  11 ஆயிரம் பேர் அதற்காக பணியமர்த்தப்பட்டார்கள்.இந்நிலையில் பகுதி நேர சுகாதார தன்னார்வலருக்கு மாதம் 4 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

இருப்பினும் சிலர் முழு நேர பணியாளராக பணியாற்றி வருகின்றார்கள். இந்நிலையில் மக்களை தேடி மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும் என நேற்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க தலைவர் கவிதா தலைமை வகித்திருந்தார்.

செயலாளர் சாந்தாமணி உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதன்பின்கலெக்டரிடம் அளித்த மனு விவரத்தில் இறுப்பதாவது,மக்களை தேடி மருத்துவம் பணியுடன் இதர ஆன்லைன் பணிகளையும் செய்து வருகிறோம். மருந்து உபகரணம் எடுத்துச்செல்லும் வாடகை,பெட்ரோல் செலவுகளை சம்பளத்தில் இருந்தே செய்கிறோம். மாதம் 4 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே சம்பளம்.

இதர சலுகைகள் கிடைக்காததால் மிகவும் சிரமப்படுகிறோம்.இதனால் குறைவான சம்பளமும் உரிய காலத்தில் வழங்காமல் தாமதம் ஏற்படுகிறது. இன்றைய விலைவாசி உயர்வை கணக்கிட்டு கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்து வங்கி கணக்கு வாயிலாக வழங்க வேண்டும்.

போக்குவரத்துப்படி மற்றும் உணவுப்படி மருத்துவ உபகரண பராமரிப்பு படி வழங்க வேண்டும். பணியை முழு நேர பணியாக நிர்ணயம் செய்து அரசு விடுமுறை நாட்களில் விடுப்பு வழங்க வேண்டும்.அனைவருக்கும் அடையாள அட்டைகள் மற்றும் அதற்கான சீருடை வழங்க வேண்டும்.

பெண் தன்னார்வலர் என்பதை மாற்றி சுகாதார ஊழியராக நியமிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.எனவே அரசு எங்களின் வேண்டுகோளை ஏற்று விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Previous articleஅரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட புதிய இலக்கு!
Next articleமக்களே உஷார்! இதனை செய்தால் அபராதம் நிச்சயம்!