தீராத கடன் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் தாமரை மணிமாலை! பயன்படுத்தும் முறை!

0
226

தீராத கடன் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் தாமரை மணிமாலை!  பயன்படுத்தும் முறை!

தாமரை மணிமாலை என்பது இயற்கையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர்நிலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று. மகாலட்சுமி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.

தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் :காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு.

இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த தாமரை மணிமாலையை பூஜையறையில் வைக்க வேண்டும்.தாமரை மணிமாலை நூலில் கோர்க்கப்பட்டு உள்ளதால் தண்ணீர் படாமல் பார்த்து கொள்ளவும்.தாமரை மணிமாலையை சுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது அணிந்து கொள்வது சிறப்பு. மேலும் அசைவம் சாப்பிடும்போதும், அசுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போதும் தவிர்த்து கொள்ள வேண்டும்.

மாதம் ஒருமுறை சுத்தமான வேப்பெண்ணெயில் நனைத்த துணியை வைத்து துடைத்து வெயிலில் வைத்து உலர்த்தி பயன்படுத்தவும். வேப்பெண்ணெய் பயன்படுத்துவதால் எறும்புகள் மற்றும் பூச்சுகள் அடிக்காமல் பாதுகாக்கும்.தாமரை மணிமாலை வீட்டில் இருந்தால் ஏற்படும் பயன்கள் :

தாமரை மணிமாலை தடைகளை நீக்கி உயர்வான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இடுகிறது.தாமரை மணிமாலை நேர்மறை சக்திகளை உள்ளடக்கியது.கடன் பிரச்சனைகள் தீர, பணம் ஈர்க்கும் சக்தியாக செயல்படுகிறது.

பொருளாதாரம் மேம்பட உதவுகிறது.பொருளாதாரம் நலிவடைவதில் இருந்து பாதுகாக்கிறது.வேலை கிடைக்காமல் சிரமப்படுபவர்களுக்கு நல்ல வழிகாட்டுதலை ஏற்படுத்துகிறது.

தாமரை மணிமாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து தடைகளும் விலகி ஐஸ்வர்யங்கள் பெருகும்.

Previous articleமாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
Next articleஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! இனி அனைத்து சேவைகளையும் வீட்டிலிருந்தபடியே பெறலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here