எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! இனி அனைத்து சேவைகளையும் வீட்டிலிருந்தபடியே பெறலாம்!

0
98

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தற்போது வாட்ஸ் அப் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

எஸ் பி ஐ வங்கியின் whatsapp சேவை ஆரம்பிக்கப்பட்டதன் மூலமாக வங்கியாளர்கள் whatsapp வங்கி சேவையை பயன்படுத்தி தங்களுடைய கணக்கு இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மென்ட், கடந்த 5 பரிவர்த்தனைகள் தொடர்பான முழுமையான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மூத்த குடிமக்கள் உட்பட வாடிக்கையாளர்கள் எல்லோரும் இனிவரும் காலங்களில் வங்கி சேவைகளை பெறுவதற்கு வங்கி குறித்த வேலைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த சேவையை நீங்களும் பெற வேண்டுமா அப்படியானால் இருக்கின்ற பணிகளை பின்தொடருங்கள்.

எஸ்பிஐ வங்கியின் whatsapp வங்கி சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் முதலில் தங்களுடைய கணக்குகளை பதிவு செய்ய வேண்டும். சேவையைப் பெற முயற்சி செய்யும் பதிவு செய்யப்படாத வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய வங்கியிலிருந்து ஒரு செய்தியை பெறுவார்.

அதில் நீங்கள் எஸ்பிஐ whatsapp வங்கி சேவைகளில் பதிவு செய்யப்படவில்லை இந்த சேவையை பயன்படுத்துவதற்கு பின்வரும் SMS WAREG A/c எண்ணை 917208933148 என்ற எண்ணுக்கு உங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அனுப்பவும் இந்த சேவைகளுக்கான விரிவான விபரங்களை நீங்கள் bank.sbiல் காணலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆகவே sbi whatsapp சேவையை பயன்படுத்த முதலில் பதிவு செய்ய வேண்டும். எஸ்பிஐ whatsapp சேவையில் பதிவு செய்வதற்கான வழிமுறையை நீங்கள் பூர்த்தி செய்த பிறகு எஸ்பிஐயின் whatsapp வங்கி சேவையை பயன்படுத்தலாம்.

வாட்சப் வங்கி சேவையை பயன்படுத்தும் முறை

பதிவு செய்தவுடன் 9022690226 என்ற எண்ணுக்கு ஹாய் என அனுப்பவும் அல்லது வாட்ஸ் அப் செயலியில் அன்புள்ள வாடிக்கையாளரே நீங்கள் வெற்றிகரமாக எஸ்பிஐ வாட்ஸப் வங்கி சேவைக்காக பதிவு செய்துள்ளீர்கள் என்று குறுஞ்செய்தி வரும் அதற்கு பதிலளிக்கவும்.

பதிலளித்தவுடன் இந்த பதிலை நீங்கள் பெறுவீர்கள். அதாவது அன்புள்ள வாடிக்கையாளரே, எஸ்பிஐ whatsapp வங்கி சேவைகளுக்கு வரவேற்கிறோம். இந்த பணிகள் முடிவடைந்தவுடன் நீங்கள் கணக்கு இருப்பு தொகை, சிறு அறிக்கை, வெளியிட்டவற்றை வாட்ஸப் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.