தொடர்ந்து விற்று வரும் கஞ்சா பொட்டலம்!?மேலும் ஒருவர் கைது!!.

Photo of author

By Parthipan K

தொடர்ந்து விற்று வரும் கஞ்சா பொட்டலம்!?மேலும் ஒருவர் கைது!!.

Parthipan K

A package of ganja that continues to be sold!? Another person arrested!!.

தொடர்ந்து விற்று வரும் கஞ்சா பொட்டலம்!?மேலும் ஒருவர் கைது!!.

தொடர்ந்து கஞ்சா பயன்படுத்துவது சமீப காலமாக நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் உட்பட இந்த கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனர்.அதுமட்டும்மல்லாமல் அவர்கள் போதைக்கு அடிமையாகியும் வருகின்றனர்.

கஞ்சா போதையால் மன ரீதியாக பல பாதிப்புகள் வரும்.பல குழப்பங்கள் அதிகரிக்கும் நிலையில் எந்த வேலையும் செய்ய தோன்றாது.இந்த கஞ்சாவை பயன் படுத்துவதால் நுரையீரல் மற்றும் உடல் ரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதில் இருக்கும் பாதிப்புகளை அறிந்த பலரும் இன்றும் பயன்படுத்ததான் செய்கிறார்கள்.அதன்படி திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் மறைவான பகுதியில்  கஞ்சா விற்பனை செய்வதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மதன் என்கிற மதன்குமாரை போலீசார்கள் கைது செய்தனர்.பின் அவரிடம் இருந்த 1400கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவி வருகிறது.