எதிரிகள் தொல்லைகளில் இருந்து உங்களை பாதுகாக்க ஒரு ரகசியம்! நீங்களும் இதை பயன்படுத்துங்கள்!

Photo of author

By Parthipan K

எதிரிகள் தொல்லைகளில் இருந்து உங்களை பாதுகாக்க ஒரு ரகசியம்! நீங்களும் இதை பயன்படுத்துங்கள்!

Parthipan K

Updated on:

எதிரிகள் தொல்லைகளில் இருந்து உங்களை பாதுகாக்க ஒரு ரகசியம்! நீங்களும் இதை பயன்படுத்துங்கள்!

திரவ நிலையில் இருக்கும் மெர்குரி எனப்படும் பாதரசத்தை, திட வடிவம் கொண்டதாக மாற்றி, ஆன்மிக நலன்களுக்கு பயன்படுத்தும் முறை சித்தர்கள் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய தாதுப்பொருட்களில் ஒன்றாக உள்ள பாதரசமானது, பஞ்சபூதங்களில் தண்ணீரும், காற்றும் இணைந்த தன்மை உடையது. இது பல நிறங்களில் இருந்தாலும் வெண்மைதான் அதிகமாக காணப்படுகிறது.

 

திரவ நிலை உலோகமான பாதரசத்தை மூலிகை சாறுகளால் தூய்மைப்படுத்தி அதே மூலிகை சாற்றால் திடப்பொருளாகவும், மருத்துவ தன்மை கொண்டதாகவும் மாற்றி அணிந்து கொள்ளும் முறையானது ரகசியமான ஒன்றாகவே இன்றளவும் இருக்கிறது.இந்த ரசமணியை கயிற்றில் கோர்த்து உடலில் அணிந்து கொண்டால், உடலிலுள்ள முப்பிணிகளுக்கும் காரணமான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை தமது நிலைகளில் சீராக இயங்க வைக்கும். இதனால் எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாக்கும்.

 

ரசமணி தரும் பலன்கள் :ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ரசமணியை அணிவதால் ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு உடல்நிலை இயல்புக்கு திரும்பிவிடும்.எதிர்மறை ஆற்றல் கொண்ட சக்திகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள இந்த ரசமணி பெரிதும் பயன்படுகிறது.

 

இந்த ரசமணியை அணிந்து கொண்டால் நம் மனதிலுள்ள ஒளியானது தூண்டப்பட்டு முகம் பிரகாசமாக ஜொலிக்கப்படுகிறது.வயது முதுமை அடைந்தாலும், உடலை இளமையோடு வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்போதுமே இருக்கிறது.

ரசமணி உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மை உடையது.கணவன்-மனைவி இடையே ஒற்றுமையை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது.தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு இந்த ரசமணி துணையாக நிற்கும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்க ரசமணியானது உதவுகின்றது.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.