சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் பிரியாணி குருமா செய்வது எப்படி?

0
195

சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் பிரியாணி குருமா செய்வது எப்படி?

 

முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம்: தேவையான பொருள்கள், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் – 150 கிராம், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – பாதி, பூண்டு – 4 பல், இஞ்சி – பாதி விரல் அளவு, தேங்காய் – கால் பாகம், உப்பு – தேவைக்கேற்ப, நெய் – சிறிது, பட்டை – ஒன்று, சோம்பு – அரை தேக்கரண்டி, ஏலக்காய் – 2, கிராம்பு – 4, கசகசா – அரை தேக்கரண்டி.

வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்;செய்முறை,கசகசாவை சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து கழுவி சிறுத் துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். தேங்காயைத் துருவி, கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொடுக்கப்பட்டுள்ள அளவில் பாதியளவு பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறியதும் விழுதாக அரைத்து வைக்கவும்.அதே வாணலியில் மீதமுள்ள பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு தாளித்து, காய்கறிகள் மற்றும் வதக்கி அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.காய்கறிகள் மசாலாவுடன் சேர்ந்து வெந்ததும், தேங்காய் விழுது சேர்த்து 2 கொதி வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.சுவையான வெஜிடபுள் பிரியாணி குருமா தயார்.

Previous articleஇந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!
Next articleஇவர்களின் திருமணத்தைப் பார்த்து ஊர் கண்ணு எல்லாம் பட்டிருக்கும்!! முதலில் சுத்தி போடுங்க!!