தனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்!

0
81

தனுஷ்-அனிருத்தை மீண்டும் இணைத்து வைத்த பிரபல இயக்குனர்!

தனுஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த 3, வேலையில்லா பட்டதாரி, மற்றும் ’மாரி’ ஆகிய மூன்று படங்களுமே சூப்பர்ஹிட் ஆகிய நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதன் பின் மீண்டும் இணையாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது துரை செந்தில்குமார் இயக்கி வரும் ’பட்டாஸ்’ படத்தில் தனுஷ் நடிக்க அதில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது

பட்டாஸ் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து விட்ட நிலையில் வரும் 25-ஆம் தேதி மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத அனிருத் பாடியுள்ளார் என இந்த படத்தின் இசையமைப்பாளர் விவேக் மற்றும் மெர்வின் தங்களது டுவிட்டர் பக்கங்களில் உறுதிசெய்துள்ளனர். இதனை அடுத்து தனுஷ், அனிருத் மீண்டும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனுஷ் படத்தில் அனிருத் இசையமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல் வெளியீட்டு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன