அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்!
வருகின்ற ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.இதற்கு இன்னும் 120 நாட்கள் இருக்கும் நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாக ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் .
அதனையடுத்து ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முதல் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 12 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ஜனவரி 14 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 16ஆம் தேதியும் ,பொங்கல் அன்று பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 17ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.