முகத்தில் அதிக படியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம்

Photo of author

By Anand

முகத்தில் அதிக படியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம்

ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் உடலில் உண்டாகும் அளவுக்கு அதிகமான வியர்வை என்பது ஒரு வித சோர்வை உண்டாக்கும்.அதுவும் முகத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வியர்வையால் பலரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

முகத்தில் உருவாகும் இந்த அளவுக்கு அதிகமான வியர்வையை இயற்கை முறையில் தடுக்கும் மருந்தை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
1. உருளை கிழங்கு – அரைத்துண்டு,
2. பூண்டு(பற்கள்) – 1,
3. மிளகு – 3.

செய்முறை:
1. முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

2. பிறகு அதில் உருளை கிழங்கை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3. இவ்வாறு நறுக்கிய உருளை கிழங்குடன் மேற்குறிப்பிட்ட அளவு பூண்டு பற்கள், மிளகு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொண்டு நன்கு சாறு போன்று அரைத்துக்கொள்ளவும்.

4. இவ்வாறு அரைத்த சாற்றை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

இந்த சாற்றை வாரம் இருமுறை குடித்து வந்தால் முகத்தில் வியர்வை வராமல் தடுக்க முடியும்.

மேலும் இதுமட்டுமில்லாமல் உணவில் கார பொருட்களை குறைத்துக்கொண்டு பழவகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதனாலும் முகத்தில் உண்டாகும் வியர்வையை குறைக்க முடியும்.