நுரை பீர்க்கங்காய்! இப்படி ஒரு சுவையான குழம்பா!
தேவையான பொருட்கள் நுரை பீர்க்கங்காய் இரண்டு, பத்து சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் நான்கு, புளி நெல்லிக்காய் அளவு, தக்காளி ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் ,கடுகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை:பீர்க்கங்காய், சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
அதன் பிறகு காயை போட்டு வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள் உப்பு சேர்க்க வேண்டும். அரை வேக்காடு வெந்ததும் தக்காளி சேர்த்து வேக விட வேண்டும். காய் வெந்ததும் ஊற வைத்த நெல்லிக்காய் அளவு புளியை அதில் சேர்த்து கடைய வேண்டும்.பிறகு கொத்தமல்லி தழை சேர்த்துக் கொள்ளலாம்.