இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்தும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.அதனால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இணைந்து இந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடர வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அளித்தனர்.
இதையடுத்து தெற்கு ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் மின்சார ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டு வண்டி எண் (06727) சென்னை- திருப்பதி இடையே முன்பதிவில்லா விரைவு ரயில் இன்று முதல் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ரயிலானது சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை பிற்பகல் 1.40 மணிக்கு சென்று சேறும். மறுமார்க்கத்தில் திருப்தியில் பிற்பகல் 1.35மணிக்கு புறப்பட்டு சென்னையை மாலை 5.15 மணிக்கு வந்தடையும்.
இந்த ரயில் பேசின் பிரிட்ஜ்,பெரம்பூர் ,வில்லிவாக்கம்,அம்பத்தூர் ,திருநின்றவூர் ,திருவள்ளூர் ,கடம்பத்தூர் ,திருவாலங்காடு ,அரக்கோணம் ,திருத்தணி ,எகாம்பரகுப்பம் ,புத்தூர் ,ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.