பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்! பரபரப்பு சம்பவம்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் செயல்படுகின்றனர்.ரயில்வே நிலையம்,முக்கிய பிரமுகர்கள் வீடு என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த நிலையில் தற்போது பொன்னேரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அதனை கேட்ட பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.அதன் பிறகு மாணவர்களை அனுப்பட்டவுடனே மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.