உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் அது கண்டிப்பாக படர்தாமரை தான்! அவை ஏற்பட காரணம்!

Photo of author

By Parthipan K

உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் அது கண்டிப்பாக படர்தாமரை தான்! அவை ஏற்பட காரணம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக ஏதேனும் இருந்தால் அது படர்தாமரை என கூறுவார்கள் . உடலில் ஏற்படும் ஒரு வகையான பூஞ்சைக்காளான் இந்த தொற்றுநோய்க்கு காரணம்மாகும். ஆனால் அதிக அளவில் இந்த பிரச்சனை பெரியோர்களை விட குழந்தைகளுக்கு தான் ஏற்படுகின்றது. படர்தாமரை இருந்தால் அதனைப் போக்க உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த தொற்று ஆனது நீரிழிவு நோய் தாக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் . மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கும் கூட ஏற்படும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக தண்ணீரில் அதிகம் புழங்குபவர்களுக்கு இந்த தொற்று ஏற்படும்.

படர்தாமரை என்பது மூன்று வகைகளில் உள்ளது. அவை தொடை இடுக்குபடை படர்தாமரை, நகப்படை படர்தாமரை, கால்ப்படை படர்தாமரை என கூறுவார்கள்.தொடை இடுக்கு படை படர்தாமரையானது ஒரு சிலர் சுத்தமில்லாத இடங்களில் படுத்து உறங்குவார்கள் அதன் மூலம் தொற்று பரவும். அதுமட்டுமின்றி அசுத்தமான துணிகள் மூலமும் தொடை இடுக்குகளில் வட்ட வட்டமாகப் படையும் அரிப்பும் ஏற்படுகின்றது.

நகப்படை படர்தாமரை என்பது குழந்தைகளை அதிகம் பாதிக்காது. நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் மட்டுமே ஏற்படுகிறது. நகத்தின் கடினமான பகுதியைக் காளான் கிருமிகள் பாதிக்கும்போது நகம் தன் இயற்கை நிறத்தை இழக்கிறது. மினுமினுப்புத் தன்மையும் கடினத் தன்மையும் குறைந்து நகப்படைத் தோன்றும்.

கால்ப்படை படர்தாமரை என்பது கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்படும்.அந்த கொப்பளங்கள் அரிப்பும் மற்றும் வலி ஏற்படுத்தும். கொப்பளங்கள் வெடித்துப் புண் உண்டாகும். சிலருக்கு இது கை விரல் இடுக்குகளில் ஏற்படுகிறது. ஈரமான இடத்தில் அதிக நேரம் கால்களை வைத்திருப்பதாலும் கை விரல்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதன் மூலமாக இந்த நோய் உண்டாகிறது.அதனால் இந்த தொற்று உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.