பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்!

0
139

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்!

தற்போது உள்ள கால கட்டத்தில் பெண்கள் அனைவரும் அவர்களின் தலை முடியை சரியாக கவனிப்பது இல்லை. அதனால் தலையின் மேற்புற தோலில் உள்ள உயிரணுக்கள் இறந்து போகின்றது. அந்த இறந்த உயிரணுக்கள் தான் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிர்வதைத்தான் பொடுகு என கூறப்படுகிறது.

முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரகின்றது.கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. எண்ணெய் பசையுடன் இருப்பது. .இந்த எண்ணெய் சுரப்பிகள் இருக்கும் இடத்தில் பொடுகு அதிக அளவில் காணப்படுகின்றது.

மேலும் கண் இமை புருவப் பகுதியில்கூட பொடுகு உருவாக வாய்ப்பு உள்ளது.வானிலை மாற்றம் ஏற்படும்போதும் இறுக்கமான ஆடைகளை அணியும்போதும் பாலிக்குளீட்டஸ் என்ற கிருமி உடலில் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிப்பது பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது போன்றவற்றால் தலையில் இந்தக் கிருமித் தொற்று ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் தலைமுடிகளுக்கிடையே சிவப்புக் கொப்பளங்கள் உருவாகி அவை உடைந்து ரத்தம் வெளிப்படும். இதனால் பொடுகானது அதிகமாக தலையில் உருவாகின்றது.

அவசரமாக தலைக்கு குளிப்பது. நன்றாகத் தலையை துவட்டாமல் இருப்பது.தினசரி ஒழுங்காக குளிக்காமல் இருந்தாலும் பொடுகு ஏற்படும்.பெண்களுக்கு மனஅழுத்தம் கவலையாலும் வரும். அதிக உப்பு அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் கூட பொடுகு ஏற்படும்.