தோசையில் இது ஒரு புதிய வகை! ஆஹா என்ன டேஸ்ட்!

0
86

தோசையில் இது ஒரு புதிய வகை! ஆஹா என்ன டேஸ்ட்!

தேவையான பொருட்கள் :நான்கு கப் தோசை மாவு , இரண்டு கப் காளான், ஒன்றரை கப் நறுக்கிய வெங்காயம், இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டீஸ்பூன் சீரகத்தூள், நான்கு டீஸ்பூன் மிளகாய் பொடி ,இரண்டு ஸ்பூன் பூண்டு விழுது, தேவையான அளவு எண்ணெய், தேவையான அளவு உப்பு , சிறிதளவு கொத்தமல்லி இலை.

செய்முறை :  முதலில் காளான் தோசை செய்வதற்கு காளானை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.  பிறகு சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள காளானை அதனுடன் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி, கொஞ்ச நேரம் மூடி வைக்க வேண்டும்.

தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் தூவி கிளறி இறக்க வேண்டும். பிறகு தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை ஊற்ற வேண்டும்.பிறகு காளான் கலவையை, அதன் மீது வைத்து, வெங்காயம், கொத்தமல்லி இலைகளைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்து எடுக்க காளான் தோசை தயார் ஆகி விடும்.

 

author avatar
Parthipan K