முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!!

0
173

முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!!

பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஓர் உணவுப்பொருள் என்னவென்றால் முதலில் முட்டையை கூறலாம்.முட்டையில் புரதச்சத்து,ஆன்டி-ஆக்ஸிடன்ட், விட்டமின் டி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.இதுஇது மட்டுமன்றி நன்றாக வேக வைத்த முட்டையில் 90% நீர் சத்து அடங்கியுள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கும்,ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது.

ஆனால் இந்த ஊட்டச்சத்து மிக்க முட்டையுடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து உண்பதினால் நம் உடலிருக்கு பல பக்க விளைவுகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்தும்.முட்டையை எந்தெந்த உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதனை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முட்டை மற்றும் சோயா பால்:

காலை நேரத்தில் சோயா பால் மற்றும் முட்டையை சேர்த்து சாப்பிடும் வழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு.சோயா பாலுடன் முட்டையை சேர்த்து சாப்பிடும் பொழுது,முட்டையில் உள்ள புரதம் சோயா பாலில் உள்ள டிரிப்சினுடன் இணைந்து, நமது உடலானது புரோட்டீனை உறிஞ்சுவதை தடுக்கின்றது.இதுமட்டுமின்றி உடல் சிதைவை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

முட்டை மற்றும் தேநீர்:

சோயா பாலை போன்றே,டீ மற்றும் தேநீருடன் முட்டை சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு.ஆனால் தேயிலை இலைகளில் உள்ள டானிக் அமிலம் முட்டையில் உள்ள புரதங்களுடன் சேரும்பொழுது டானிக் அமில புரதச் சேர்மத்தை உருவாக்கி பெரிஸ்டால்சிஸின் செயல்பாட்டைக் குறைத்துவிடும்.

இதனால் குடல் பாதையில் மலத்தை சேமிக்கும் நேரத்தை அதிகரிக்கும்.இது மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு நமது குடல் இயக்கங்களை பாதிப்படைய செய்யும்.மேலும் நமது உடலில் நச்சுப்பொருட்கள் தேங்கும் அளவையும் அதிகரித்துவிடும்.

பழங்கள் மற்றும் முட்டை:

திராட்சை,ஆப்பிள்,தர்பூசணி போன்ற பழங்களுடன் முட்டையை சாப்பிட கூடாது.ஏனெனில் பழங்களின் செரிமான வேகமும் முட்டையின் செரிமான வேகமும் மாறுபடுவதால் நம் உடலில் அஜீரண பிரச்சினையை அதிகளவில் ஏற்படுத்தும்.

முட்டை மற்றும் உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து செய்யப்படும் உணவுப் பொருட்கள்,பலரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு பொருளாகும்.ஆனால் உருளைக்கிழங்குடன் முட்டையை சாப்பிடுவதால்,உருளைக் கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச் சத்தை நம்முடைய உடலானது உறிஞ்சுவதை தடுக்கின்றது.

இது மட்டுமின்றி இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டால் அஜீரண கோளாறை ஏற்படுத்தும்.

வாத்து இறைச்சி மற்றும் முட்டை:

முட்டையுடன் சேர்த்தோ அல்லது முட்டை சாப்பிட்ட பிறகோ வாத்து இறைச்சியை உண்ணக் கூடாது.ஏனெனில் வாத்து இறைச்சிக்கும் முட்டைக்கும் ஒரே வேதிபண்பு இருப்பதினால் அது செரிமானப் பிரச்சனையையும் வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்திவிடும்.

அதாவது வாத்து இறைச்சியில் இனிப்பு தன்மையும் குளிர்ச்சியை உண்டாக்கும் காரணிகளும் உள்ளது. இதேபோன்று முட்டையிலும் அதிக அளவு புரதமும் குளிர்ச்சியை உண்டாக்கும் காரணிகளும் உள்ளது. எனவே இந்த இரண்டு பண்புகளும் ஒன்று சேரும் பொழுது இந்தப் பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

முட்டை மற்றும் சர்க்கரை:

முட்டை மற்றும் சர்க்கரையை சேர்த்து சமைத்தால்,முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றுசேர்ந்து கிளைகோசைல் லைசின் என்ற வேதிப் பொருளை உருவாக்கி,முட்டையிலுள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைத்து நச்சுத்தன்மையுள்ள சேர்மதை உருவாக்கும்.இந்த சேர்மதை நமது உடலானது உறிஞ்சுவது மிகவும் கடினம்.இதனால் நம் உடலில் உள்ள ரத்தம் உறைந்து நம் உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து ஏற்படும்.

Previous articleஅரிசியில் இத்தனை வகைகளா? எந்தெந்த அரிசி எந்தெந்த வியாதிகளுக்கு தெரியுமா?
Next articleஇளநரை மற்றும் பொடுகு நீங்க! இதை 2 முறை போடுங்க!