சோளப்பயிருக்கு இடையே கஞ்சா செடி! போலீசாரிடம் வசமா சிக்கிய விவசாயி!
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல இடங்களில் சோதனைகளை நடத்தி, போதை பொருட்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள், இருப்பினும் அங்கங்கே சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யவதும், விளைவிப்பது போன்ற செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடம்பூர் மலை பகுதியில் உள்ளது. அங்குள்ள கேர்மாளம், குத்தியாலத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸாரால் சோதனைகள் நடத்தப்பட்டது. இச்சோதனையில் அத்தியூர் பகுதியில் மாதன் தமது விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சோளப்பயிருக்கு நடுவே கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார், அவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். சோதனையில் 496 செடிகளை பறிமுதல் செய்து அவற்றை அளித்தனர்.
இதனையடுத்து கடம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுதையடுத்து மாதனை கைது செய்தனர். பின்பு அவரை சிறையில் அடைத்தனர். மேலும் மாதனுக்கு கஞ்சாவிதைகள் எங்கிருந்து கிடைத்தன என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பல்வேறு தோட்டங்களில் போலீசார் சோதனை செய்தும் வருகின்றனர் .