மைனருக்கு பிறந்த பெண் குழந்தை! போலீசில் பிடித்துக் கொடுத்த மருத்துவர்கள்!

0
268
Baby girl born to a minor! Doctors caught by the police!
Baby girl born to a minor! Doctors caught by the police!

மைனருக்கு பிறந்த பெண் குழந்தை! போலீசில் பிடித்துக் கொடுத்த மருத்துவர்கள்!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய சிறுமி.இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார்.இந்நிலையில் அன்னுரை சேர்ந்தவர் பிரபாகரன்(22).இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.அந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியது.

மேலும் இவர்கள் தனியாக சந்தித்து வந்துள்ளனர்.இந்நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.இதனை அந்த சிறுமி காதலனிடம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்த பிரபாகரன் அந்த சிறுமியை கோவிலுக்கு அழைத்து சென்று பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அந்த மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.இதனையடுத்து பிரபாகரன் மனைவியை பிரசவத்திற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தார்.பிறகு அங்கு அவருக்கு பெண்குழந்தை பிறந்தது.

மேலும் மருத்துவமனையில் அந்த மாணவியிடம் மருத்துவர்கள் விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் 17வயது பிளஸ் ஒன் படிக்கும் மாணவி என்பது தெரியவந்தது.உடனடியாக மருத்துவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அதனையடுத்து அன்னூர் போலீசார்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் பிரபாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.